ஈரோடு மாவட்டம் நாசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், சிவக்குமார், பெரியசாமி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். காரில் சென்ற ஜான், ஆதிரா தம்பதியை இக்கும்பல் அரிவாளால் வெட்டினர். ஜான் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி ஆதிரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இக்கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.