பார்வதிபுரம் பகுதியில் 2 கடைகளுக்கு சீல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில், போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அங்கு கடைகளில் குட்கா புகையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த குட்கா புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் இன்று செய்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு கடைகளுக்கு அவர்கள் சீல் வைத்தனர்.