இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை பரப்பும் ஆர்எஸ்எஸ் அஜண்டாவைக் காட்சிப்படுத்தும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்" என வலியுறுத்தி நாகர்கோவில் வடசேரி ராஜேஷ் திரையரங்கம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை வடசேரி காவல்துறையினர் கைது செய்தனர்.