கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை கிராம ஊராட்சியில் செயல்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தை ஒட்டி பட்டணம் கால்வாயில் 30 அடி ஆழத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்து கால்வாய் கரைகட்டி பள்ளிக்கூடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மேலாண்மை குழு சார்பில் இன்று (நவ. 04) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.