குமரி மாவட்டத்தையும் கேரளாவையும் இணைக்கும் நீர்வழிப் போக்குவரத்து பாதையாக இருந்த வரலாற்று சிறப்புமிக்க ஏவிஎம் கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. ஒரு காலத்தில் கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து மண்டைக்காடு வரை நீர்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு போன்றவற்றிற்கு இக்கால்வாய் பிரதானமாக விளங்கியது. தற்போது இந்த கால்வாய் செயல்பாடின்றி காணப்படுகிறது.
இவற்றை தனியார் பங்களிப்புடன் தூர்வாரவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் திட்டம் செயல்படுத்த பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கலெக்டர் அழகுமீனா நேற்று ஏவிஎம் கால்வாய் பகுதி ஆய்வு செய்தார். இதில் கிள்ளியூர் தொகுதி நீரோடியிலிருந்து ஆய்வை தொடங்கினார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.