கன்னியாகுமாரி மாவட்டம்
மார்த்தண்டம் கோதேஸ்வரம் கோயில் வளாகத்தில் நின்றுருந்த பழமையான வேப்பமரம் சாய்ந்து விழுந்ததில் மூன்று பக்தர்கள் காயம் அடைந்தனர். மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோயில் மிகவும் பழமையான கோயில் ஆகும். இந்த கோயில் சுற்றிலும் வேப்ப மரம், அயணி மரம், அரச மரம் ஆல மரம் உள்ளிட்ட மரங்கள் உள்ளது. இந்த மரங்கள் மற்றும் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகவே பழமையான மரங்களை முறித்து அப்புறப்படுத்த பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை பக்தர்கள் கோயிலை சுற்றி வலம் வந்த போது வேப்ப மரம் சரிந்து விழுந்தது. இதில் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதம் அடைந்தது. பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதில் மூன்று பக்தர்களுக்கு லேசான உரசல் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே கோயிலை சுற்றிலும் வளர்ந்துள்ள பழமையான மரங்களை அப்புறப்படுத்த பத்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.