புதுக்கடை : திறந்த 2 நாளில் மூடிய அரசு அங்கன்வாடி மையம்

61பார்த்தது
புதுக்கடை அருகேயுள்ள தும்பாலி, பொற்றவிளை பகுதியில் கடந்த 2003 - 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் தும்பாலி அங்கன்வாடி மையம் எண் -102 துவங்கப்பட்டது. இந்த மையம் ஆரம்ப காலத்தில் சுமார் 3 ஆண்டுகள் தும்பாலி கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் செயல்பட்டது. 

பின்னர் அங்கிருந்து மாற்றப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு வரை வாடகை வீடுகளில் மையம் செயல்பட்டது. இந்த நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட 2022- 2023-ம் ஆண்டு பொற்றவிளை பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ. 14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி திறக்கப்பட்டது. அதன் பிறகு 2 நாட்கள் அரசின் புதிய கட்டிடத்தில் குழந்தைகளுடன் புதிய மையம் செயல்பட்டதாக கூறப்படுகிறது. 

அதன் பின் சிலரின் தூண்டுதலால் புதிய கட்டிடத்தில் மையம் செயல்பட விடாமல் தடுப்பதுடன், மேலும் அரசு ஆவணங்களையும், பொருட்களையும் பழைய கட்டிடத்தில் இருந்து எடுக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறுகின்றனர். அரசு நிதியில் அமைக்கப்பட்ட தும்பாலி அங்கன்வாடி மையம் அரசால் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி