தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்கிறது. மலையோர கிராமங்களான பேச்சுப்பாறை, மோதிரமலை, உள்ளிட்ட அனைத்து மலை கிராமங்களிலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையடுத்து இன்று (25-ம் தேதி) குமரியில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது அதன் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை இன்று பாதிப்படைந்தது.