குமரி- போலி தங்க நகை கொடுத்து பணம் மோசடி

51பார்த்தது
குமரி- போலி தங்க நகை கொடுத்து பணம் மோசடி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காஞ்சிரகோடு கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(50) , இவர் மார்த்தாண்டத்தில் எம் கே என்னும் ஜீவல்லரி நடத்தி வருகிறார் , இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் 916 கால் மார்க் முத்திரை பதித்த ரெண்டு தங்க நாணயங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார். முத்திரையை பார்த்த மணிகண்டன் ரெண்டு நாணயங்களுக்கும் ரூ. 1, 00500 கொடுத்துள்ளார். அந்த வாலிபர் பணத்தை பெற்று விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் நகையை சோதித்துப் பார்த்தபோது அந்த இரண்டு தங்க நாணயங்களும் போலியானவை என தெரிய வந்தது, இதை அடுத்து அந்த வாலிபரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் அவரைக் குறித்து எந்த விவரங்களும் கிடைக்கவில்லை, இதை அடுத்து அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் வேளாங்கணி உதய ரேகா தலை மேலான போலீசார் அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் களியக்காவிளை பொன்னப்பன் நகர் சக்கரபாணி மகன் லெனின் (39), களியக்காவிளை தையாலுமுடு முகேஷ் என்பவரது மகன் பிரதீஷ் (36) , களியக்காவிளை தையாலமோடு ராபி மகன் டொம்னிக் லால்(36) , ஆகிய மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி