குமரி- எம். பி , எம். எல். ஏ நன்றி அறிவிப்பு

59பார்த்தது
விஜய் வசந்த் எம். பி, தாரகை கத்பர்ட் எம். எல். ஏ இணைந்து குழித்துறை பகுதியில் நன்றி அறிவிப்பு

களியக்காவிளை, ஜூலை. 11-
விஜய வசந்த் எம் பி, தாரகை கத்பட் எம்எல்ஏ இணைந்து குழித்துறை பாலவிளையிலிருந்து நேற்று நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை துவக்கினர்.

நாடாளுமன்ற பொது தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் விஜய் வசந்த் எம் பி, விளவங் கோடு சட்டமன்றத் தொகுதியில் தாரகை கத்பர்ட் எம். எல். ஏ ஆகியோர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளவங்கோடு கிராம பஞ்சாயத்து உட்பட்ட பாலவிளையிலிருந்து விஜய் வசந்த் எம் பி, தாரகை கத்பர்ட் எம்எல்ஏ ஆகியோர் நேற்று இணைந்து நன்றி அறிவிப்பு மேற்கொண்டனர். திறந்த வாகனத்தில் சுற்றுப்பயணத்தை துவக்கினர்.
இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சியில்
மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர். பினுலால் சிங், விளவங்கோடு பஞ்சாயத்து தலைவர் லைலா ரவிசங்கர், மேல்புறம் காங்கிரஸ் கட்சி மேல்புறம் வட்டாரத் தலைவர் ரவிசங்கர், அறங்காவலர் குழு உறுப்பினர் ஜோதிஷ்குமார், காங்கிரஸ் மாந்தில நிர்வாகிகள் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி