கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்
விஜய் வசந்த் வாழ்த்துச் செய்திகள் கூறியதாவது: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு
அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்கள் வாழ்வில் வளம் பெருகவும், ஒளி நிறையவும் வேண்டுகிறேன். வெற்றிகளும் சாதனைகளும் உங்களை தேடி வர எனது வாழ்த்துக்கள். உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன். அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.