தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ வ வேலு இன்று குமரி மாவட்டம் வந்தார். அவர் மார்த்தாண்டத்தில் சேதமடைந்த சேலைகளை சாலைகளை பார்வையிட்டு பின்னர் கன்னியாகுமரி திருவள்ளூர் சிலை விவேகானந்தர் சிலைகளுக்கு இடையான கண்ணாடி என்ற பாதங்களையும் பார்வையிட்டு அதன் பின்னர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: -
மார்த்தாண்டம் பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்க உடனடி நடவடிக்க எடுக்கப்படும். மலையோர பகுதிகளில் சாலை அமைக்கும் போது உறுதித் தன்மை விரைவில் கேள்விக்குறியாகி விடுவதால் இந்த பகுதியிலும் சாலை அமைப்பதற்கான காலக்கடுவை குறைப்பதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டுள்ளது. இதற்கான கோப்புகள் தயார் நிலையில் உள்ளது. விரைவில் அதற்கான அனுமதி வழங்கப்படும்.
பழனியில் முருகன் மாநாடு நடத்தியது குறித்து திராவிட கழக தலைவர் வீரமணி, தொல் திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை பொறுத்தவரையில் இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாநில அறிஞர்களை அழைத்து வந்து மாநாடு நடத்தப்பட்டது.
திமுக மத நம்பிக்கை உள்ளவர்களுக்கும் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவான அரசாக செயல்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என்றார். பேட்டியின் போது அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.