களியக்காவிளை அருகே உதியன் குளம் கரை செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோயில் உள்ளது இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை தினத்தைன்று காஞ்சிர மூட்டு கடவு பகுதியில் பலி தர்ப்பண விழா நடப்பது வழக்கம். இந்த வருடம இந்த நிகழச்சி வரும் 3-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகமான பக்தர்கள் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பண நிகழ்ச்சியில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே அரசு உயர் அதிகாரிகள் தீ அணைப்பு அதிகாரிகள், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் காஞ்சிர மூட்டு கடவு பகுதியில் நேற்று நடந்தது. இதில் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி தலைமை வகித்தார். மேல் சாந்தி குமார் முன்னிலை வகித்தார்.