சுங்கான்கடையில் உள்ள பொன்மலை திருமலை மண்பாண்ட தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்று (27. 07. 2024) மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா சீலாவீல் மண்பாண்ட மின் சக்கரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்-
தமிழக அரசு சார்பில் மண்பாண்ட தொழிலாளர்களின் பொருளாதாரநிலை மேம்பட கிராமபகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீலாவீல் மின்விசை சக்கரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மொத்தம் 286 விலையில்லா சீலாவீல் மண்டபாண்ட சக்கரங்கள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. என பேசினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மண்டபாண்டங்கள் தயாரிப்பதனை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (காதி) எபனேசர், நாகர்கோவில் உள்ளுர் திட்டக்குழும உறுப்பினர் மரியசிசுகுமார், மண்பாண்ட தயாரிப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.