திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் மாகின் (63). இவரது மகள் பாத்திமா (23). சம்பவத்தினம் இரவு இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து பாத்திமாவின் கடத்தில் கடந்த செயினை பறிக்க முயன்றார். திடீரென கழுத்தில் கிடந்த செயினை யாரோ இழுப்பதை உணர்ந்த பாத்திமா திடுக்கிட்டு விழித்து செயினை விடாமல் போராடினார்.
ஆனால் அந்த நபர் செயினை வேகமாக இழுத்ததில் ஒன்றரை பவுன் செயினில் அரைப்பவுன் செயின் அந்த நபரிடம் சிக்கியது. இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மாகின் உட்பட மற்றவர்கள் வந்தனர். அதற்குள் அந்த நபர் கிடைத்த செயினுடன் மாயமாக மறைந்தார்.
இது குறித்து மாகின் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையனுடன் போராடியதில் பாத்திமாவுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.