பேச்சிப்பாறை: தந்தை மகனை தாக்கிய கரடி; நாய் காப்பாற்றியது

80பார்த்தது
பேச்சிப்பாறை அருகே உள்ள தோட்டமலை பழங்குடியின குடியிருப்பை சேர்ந்த ராமய்யன் (70). இவருடைய மகன் விஜயகுமார் (40 ). இவர்கள் அங்கு மிளகு  விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று இருவரும்  மிளகு பறித்துவிட்டு மாலை 3 மணிக்கு குடியிருப்பை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். கூட அவர்கள் நாயும் சென்றது.  
      அப்போது வரும் வழியில் ஒரு நீர்ச்சுனையில் கரடி தனது குட்டியுடன் நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த கரடி தனது குட்டியைத்தான் அவர்கள் பிடிக்க வருகிறார்கள் என நினைத்து இருவரையும் கடித்து குதறியது.  
     இக்கட்டான நேரத்தில் நாய் கரடியுடன் சண்டை இட்டுள்ளது. அப்போது நாயை கரடி துரத்தி சமயத்தில் தந்தை மகனும் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக சத்தம் கேட்டு குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பியத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் குலசேகரம் வனச்சரகத்தினர் சம்பவத்தில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி