டெல்லி மாநிலத்தின் 4வது பெண் முதலமைச்சராக இன்று (பிப்., 20) ரேகா குப்தா பதவியேற்கிறார். இதற்காக, ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 48 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.