கேரளாவை சேர்ந்த தம்பதி விஜீஷ் (28) - சிமி வர்ஷா (22). இருவரும் நேற்று முன்தினம் (பிப். 18) பைக்கில் சென்று கொண்டிருந்த போது பேருந்து மீது பைக் மோதியது. இதில் வர்ஷா பேருந்துக்கு அடியில் நிலைதடுமாறி விழுந்த நிலையில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த விஜீஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.