மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘சாவா’ திரைப்படத்திற்கு மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்தார். ஜபல்பூரில் நேற்று (பிப்., 19) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சாவா’ என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு சிறந்த படத்திற்கு நாம் ஏன் வரி வசூலிக்க வேண்டும்? இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும்' என்றார்.