சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப். 19) தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தானை நியூசிலாந்து வீழ்த்தியது. இன்று (பிப். 20) நடைபெறும் போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. துபாயில் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தியா - வங்காளதேசம் இதுவரையில் மோதியுள்ள 41 போட்டிகளில் இந்தியா 32-ல் வெற்றி கனியை பறித்து அசத்தியுள்ளது.