டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராக இன்று (பிப்., 20) ரேகா குப்தா பதவியேற்கிறார். டெல்லியில் பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. ஏற்கனவே 1998ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் 52 நாட்கள் மட்டும் முதலமைச்சராக இருந்துள்ளார். 1998 முதல் 2013 வரை காங்கிரஸின் ஷீலா தீட்சித் தொடந்து 3 முறை பதவி வகித்துள்ளார். கடந்த 2024 செப்டம்பர் முதல் 2025 பிப்ரவரி வரை ஆம் ஆத்மியின் அதிஷி முதலமைச்சராக இருந்துள்ளார். தற்போது 4வது பெண் முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பதவியேற்கிறார்.