தளியல் ஜடாதீஸ்வரர் கோவிலில் மகா மிருத்ஞ்சய ஹோமம்

69பார்த்தது
திருவட்டார் அருகே தளியல் என்ற பகுதியில் ஸ்ரீ ஜடாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. மிக பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் பொது மகா பிரதோஷ திருவிழாவும், மஹாமிருத்ஞ்சய ஹோமம் போன்ற நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.  

காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 11 மணிக்கு நவ கலச அபிஷேகம், தொடர்ந்து அலங்காரம், பகல் 12. 45க்கு தீபாராதனை தொடர்ந்து அன்னதானம், மாலை 4 மணி முதல் அனைத்து பக்தர்களும் இணைந்து நடத்திய மகா பிரதோஷ பூஜை ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. விழாவில் 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் ஏராளம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி