குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியில் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக திருவிழா கடந்த
5 ம்தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. விழாவில் முக்கிய நிகழ்வான விக்கிரக பிரதிஷ்டை இன்று நடைபெற்றது.
தொடர்ந்து பாலாலயத்தில் இருந்து கணபதி, வனதுர்கா, பத்திரகாளி, நாகர் , ஸ்ரீ தர்ம சாஸ்தா சாமி சிலைகளை வேத மந்திரங்கள் முழங்க பிரதிஷ்டை நடைபெற்றது. பின்னர் வேள்வி குண்டத்தில் பூஜிக்கபட்ட கலச குடத்துடன் அர்ச்சகர்கள் ஆலயத்தை வலம் வந்து கும்பத்தின் மேல் அபிஷேகம் செய்தனர்.
இந்த நிகழ்வில் வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம சுவாமி சைதன்யானந்த ஜி மகராஜ் , செங்கோட்டு கோணம் ஆதினம் சுவாமி பிரமானந்த சரஸ்வதி, நாராயண ராவ் கேரள மாநில விஸ்வ ஹிந்து பரிசத் பொறுப்பாளர் உட்பட ஆன்மீக சான்றோர்கள் பங்கேற்று ஆசி உரையாற்றினர். இந்த நிகழ்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.