அருமனை அருகே ரப்பர் தோட்டத்தில் தூக்கில் தொங்கிய தொழிலாளி

83பார்த்தது
அருமனை அருகே ரப்பர் தோட்டத்தில் தூக்கில் தொங்கிய தொழிலாளி
அருமனை அருகே உள்ள குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (60). இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.   இதில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. ஜான்சனுக்கு மது பழக்கம் உள்ளதாகவும்,   அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

        இந்த நிலையில் நேற்று காலையில் ஜான்சன் வழக்கம்போல் ரப்பர் பால் வெட்ட தோட்டத்திற்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதை அடுத்து அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

       இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் சென்று ஜான்சனின் உடலை மீட்டு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

       இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஜாண்சன் தற்கொலை செய்து கொண்டாரா?   அல்லது வேறு ஏதாவது சம்பவமா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி