கன்னியாகுமரி மாவட்டம் களியல் கிராமத்திற்குட்பட்ட ஆறுகாணி, பத்துகாணி, அணைமுகம், நிரப்பு, கொண்டை கெட்டி, முல்லைப்பூக்காணி, கற்றுவா, கணபதிக்கல், மருதம்பாறை ஆகிய ஊர்களில் விவசாய விளை நிலங்களில் பயிரிடப்படும் அல்பீசியா மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது. இந்நிலையில், இதனை விலக்க வேண்டும் என விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேற்று(செப்.6) மனு அளித்தார்.