பால்வினை நோய் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

72பார்த்தது
தமிழ்நாடு எய்ட்ஸ் சங்கம், கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகின் சார்பில் பால்வினை நோய்தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (28. 08. 2024) நடைபெற்றது. இப்பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா துவக்கி வைத்தார்.  

  கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற இப்பேரணியானது ஆட்சியர் அலுவலக முகப்பில் தொடங்கி டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று எஸ். எல். பி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

    மேலும் வீதிநாடகம், கிராமிய நடனங்கள், பாடல்கள் மூலம் விழிப்புணர்வு  நிகழ்வானது 10 நாட்களுக்கு இரண்டு கலைக்குழுக்கள் தீக்ஷா மற்றும் கலைமாமணி பழனியாப்பிள்ளை கலைக்குழுவினரால் 40 கிராமங்களில் நடைபெற உள்ளது.  

     நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு. மீனாட்சி,  மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் மாவட்ட திட்ட மேலாளர் மரு. ஜெ. பெடலிஸ் ஷமிலா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி