நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா கொடியேற்றம்

55பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விழாவில் மாலை திருத்தல அதிபர் பேரருட்தந்தை சனில் ஜோண் பந்திச்சிறக்கல் திருக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து நடந்த திருப்ப லியை நித்திரவிளை ஜெய மாதா மறைவட்ட ஆலய பங்குதந்தை ஜோஸ் முட்டத்துப்பாடம் நிறைவேற்றினார். வேதநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குதந்தை ஹென்ரி குயின் பிலீப் மறையுரையாற்றினார். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விசுவா சிகள் முத்துக்குடைகளை தாங்கியும் புனித அல்போன்சா திருவுருவம் பொறித்த சிறுகொடிகளை ஏந்தியும் பவனியில் கலந்து கொண்டனர். நேர்ச்சை விளக்குகளை காணிக்கையாக ஒப்பு கொடுத்து திருவிழா திருப்பலியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அருட் தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் மற்றும் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகள் திருத்தல அதிபர், துணை பங்குதந்தை சான்ஜோதேனோபிளாக்கல் மற்றும் விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், கைக்காரர்களான ஜோமோன் ஜோசப், ஜோபெலிக்ஸ் மலை யில் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி