கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி, ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரவிளை ஆகிய உப மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
எனவே, நாளை மறுநாள்(அக்.4) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாகர்கோவில் பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம். எஸ். ரோடு, காலேஜ்ரோடு, கோர்ட்டு ரோடு, கே. பி. ரோடு, பால் பண்ணை, நேசமணிநகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், கோதை கிராமம், அப்டா மார்க்கெட், தம்மத்துகோணம், அனந்தநாடார்குடி, அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்பு தூர், தடிக்காரன்கோணம், அழகியபாண்டியபுரம், கோணம், இருளப்பபுரம், பட்டகசாலியன்விளை, கலைநகர், பொன்னப்பநாடார் காலனி, குருசடி, பீச்ரோடு, என். ஜி. ஓ. காலனி, குஞ்சன்விளை, புன்னைநகர் ஆகிய இடங்களிலும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.