நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும் வாரந்தோறும் புதன்கி ழமை அன்று பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஏற்கனவே ஏற்கனவே போலீஸ் போலீஸ் நிலையத்தில் மனு அளித்து விசாரணையில் திருப்தி அடை யாதபொதுமக்கள் கலந்துகொண்டு மீண்டும் மனு அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனு வாங்கும் வாராந்திர குறைதீர் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதையடுத்து நாகர்கோவில், குளச்சல், தக்கலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 போலீஸ் சப்-டிவிஷனுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டன. அந்த வகையில் 42 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது.