ரயில் மோதி விபத்து - அமித்ஷா இரங்கல்

63பார்த்தது
ரயில் மோதி விபத்து - அமித்ஷா இரங்கல்
மகாராஷ்டிராவில் பெரும் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மகாராஷ்டிரா, ஜல்கானில் ரயில் மோதி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பற்றியதாக பயந்துபோன பயணிகள் ரயிலில் இருந்து குதித்துள்ளனர். இந்த விபத்தில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி