குமரி: மக்கள் நலனுக்காக ‘ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்.

60பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் மற்றும் அடிதடி, திருட்டு, கொள்ளை ஆகிய குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை களை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் எடுத்து வருகிறார். இந்த நிலையில் மக்கள் நலன் மற்றும் குற்ற செயல்களை தடுப்பது தொடர்பாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கூடுதலாக கண்காணிக்க, ஒரு கிராமம் ஒரு காவலர்' என்ற அடிப்படையில் ஊர் கண்காணிப்பு திட்டத்தை நேற்று சுசீந்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லு விளை கிராமத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி