கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது அறுவடைக்கு பின்னர் வைக்கோல்கள் நெல் வயல்களில் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருவதால் வயல்களில் தண்ணீர் தேங்கி வைக்கோல் தண்ணீரில் சேதம் அடைந்துள்ளது. இதனால் வைக்கோலை வாங்க வியாபாரிகள் வரவில்லை. இதனால் வைக்கோல் அடிமாட்டு விலைக்கு விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.