கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்வதற்கும், பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கும், இடையூறாக பேருந்து நிலையத்தின் முக்கிய பகுதிகளில் அனுமதி இன்றி பலர் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். இதையடுத்து நேற்று இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.