கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் நேற்று புன்னைநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகைக்கடையில் சோதனை நடத்தினர். சோதனையில், தடைசெய்யப்பட்ட 40 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடை உரிமையாளர் புன்னை நகரை சேர்ந்த ஜான் பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.