கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்ற பின் சொந்த ஊரான மேலக்காட்டுவிளை பகுதிக்கு நேற்று வருகை தந்தார். அங்கு அவருக்கு ஊர் மக்கள் சார்பில் சிறப்பான பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ஊர்மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மாவட்ட எஸ். பி ஸ்டாலின் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.