நாகர்கோவிலில் மது போதையில் ஆட்டோ ஓட்டிய 2 பேர் மீது வழக்கு

82பார்த்தது
நாகர்கோவிலில் மது போதையில் ஆட்டோ ஓட்டிய 2 பேர் மீது வழக்கு
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் நேற்று(செப்.28) வேப்பமூடு மற்றும் புன்னை நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது கணபதிபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார், திக்கணங்கோட்டைச் சேர்ந்த ஜெயபாலன் ஆகியோர் மது குடித்து விட்டு ஆட்டோ ஓட்டி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு கோர்ட்டு மூலமாக தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி