கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோ வினித். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் சம்பவத்தன்று கீழ ஆசாரிப்பள்ளம் புனிதமிக்கே அதிதூதர் ஆலய திருவிழா முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். சரவணன் என்பவர் வினித்தை தனது வாகனத்தில் ஏற்றிச்சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிறிஸ்டோ வினித் கொடுத்த புகாரின்பேரில் ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.