நாகர்கோவில்: மது போதையில் கிடந்த முதியவர் திடீர் மரணம்

59பார்த்தது
நாகர்கோவில்: மது போதையில் கிடந்த முதியவர் திடீர் மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 63). இவர் நேற்று முன்தினம் (செப்.,19) நாடான்குளம் பகுதியில் மது போதையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் இதுபற்றி 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (செப்.,20) காலை கணேசன பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி