தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி நாளை (செப்.,22) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நாகர்கோவில் வரும் அவர் நாகர்கோவில் பயணிகள் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் திருவட்டாறில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதன் பின் நெட்டா அருகில் உள்ள ரிசார்டில் தங்குகிறார். கவர்னர் வருகையை ஒட்டி மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.