கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 149-வது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கவிமணி முழு திருவுருவ சிலைக்கு இன்று (27. 07. 2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, தெரிவிக்கையில்-
குமரி மாவட்டம் தேரூரில் 1876 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள் மகனாக பிறந்தவர் கவிமணி தேசிய விநாயம் பிள்ளை. சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். ஆங்கில மொழியில் எட்வின் ஆர்னால்டு எழுதிய ”லைட் ஆஃப் ஆசியா” என்ற நூலை தமிழில் ”ஆசிய ஜோதி” என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தார். என கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ். காளீஸ்வரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா. ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் மூர்த்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வ லெட் சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷியா, செயல் அலுவலர் கமலேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.