குளச்சல் அருகே தீயில் கருகிய மூதாட்டி பலி

1539பார்த்தது
குளச்சல் அருகே தீயில் கருகிய மூதாட்டி பலி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம் படுவாக்கரையை சேர்ந்தவர் தங்கராஜ்(76). இவர் கேரள மாநிலம் கோட்டையத்தில் கட்டிட காண்ட்ராக்டராக உள்ளார். இவரது மனைவி லட்சுமி (65). லட்சுமி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1 ம் தேதி அதிகாலை வீட்டிலிருந்த லட்சுமி  கேஸ் அடுப்பை பற்ற வைக்கும் லைட்டரால் நைட்டியில் தீவிர வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் நைட்டி முழுவதும் தீப்பற்றிக்கொண்டதில் உடல் கருகிய லட்சுமி வலியால் அலறினார். அவரது அலறல் கேட்டு  வீட்டினர் லட்சுமியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லட்சுமி இன்று மாலை பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கணவர் தங்கராஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி