நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் அப்பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் கடைகளுக்கு வருவோர் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் ரோட்டில் இறங்கி நடந்து செல்கின்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே காவல் துறை பொதுமக்கள் நடைபாதையான இப்பகுதியில் வாகனங்களை நிறுத்த விடாமல் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.