குளச்சல் பகுதி துறைமுக தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் என்பவர் மகன் கிறிஸ்துராஜன் (36). கடந்த 3-ம் தேதி புதூரில் உள்ள தனது நண்பரை பார்க்க காரில் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வெட்டுமடை என்ற பகுதி சந்திப்பில் ஏவிஎம் கால்வாய் அருகே காரை நிறுத்திவிட்டு இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மூன்று பேர் அவரை தாக்கி கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து கிறிஸ்துராஜன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.