விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஏழாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் இதை ஒட்டி இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
இந்த சிலை பிரதிஷ்டை செய்ய நான்கு நாட்கள் உள்ளதால் சிலைகள் தயாரிப்பு பணி முடிந்து அந்தந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
இந்த மகா சார்பில் நேற்று சூரங்குடியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று இந்து முன்னணி சார்பில் கண்ணாட்டு விளையில். பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
கோயில்கர், பொது இடங்களில் பூஜைக்கு வைக்கப்படும் பொது இடங்களில் பூஜைக்கு வைக்கப்படும் சிலைகள் வரும் 13, 14, 15 -ம் தேதிகளில் நீர் நிலைகள் கரைக்கப்படுகிறது. கன்னியாகுமரி, சொத்த விளை, சங்குத்துறை, திற்பரப்பு, மிடாலம், தேங்காப்பட்டணம், மண்டைக்காடு உள்ளிட்ட பல இடங்களில் இந்த சிலைகள் கரைக்கப்படுகிறது.
மேலும் வட மாநிலங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் கொண்டு வந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வைத்து விற்பனை நடை பெற்று வருகிறது.