கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியின் பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ரூ. 11 கோடியே 54 லட்சத்து 44ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 172 வீடுகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. நாசர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்த நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. ராஜேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளார்.