குமரியில் மீண்டும் தொடர் மழை ரப்பர் உற்பத்தி பாதிப்பு

76பார்த்தது
கன்னியாகுமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் ரப்பர் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ரப்பர் இந்தியாவிலேயே முதல் தர ரப்பர் ஆகும்.   

    இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வழக்கத்தை விட அதிகமாக தொடர் மழை பெய்ததால் ஏற்கனவே மாவட்டத்தில்  அனைத்து தொழில்களும் பாதிப்படைந்தன. இதில் ரப்பர் உற்பத்தியும் குறைந்ததால், ரப்பர் விலை தற்போது உயர்ந்தது.  

       கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரப்பர் விலை கிலோ ரூ. 250 ஐ எட்டியது. ரப்பர் தொழிலாளிகள் இதனால் மகிழ்ச்சியடைந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் குமரியில் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று குமரியில் கன மழை பெய்தது. இதனால் ரப்பர் உற்பத்தி மீண்டும் முடங்கியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி