வெங்கட்பிரபுவின் "பார்ட்டி" விரைவில் ரிலீஸ்!

74பார்த்தது
வெங்கட்பிரபுவின் "பார்ட்டி" விரைவில் ரிலீஸ்!
2018-ம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாரான படம் 'பார்ட்டி'. டி.சிவா தயாரித்த இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். இந்த படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பிஜியில் இருந்து வரவேண்டிய சான்றிதழ் தாமதத்தினால் இந்தப் படம் வெளியீடு தடைப்பட்டது. இந்நிலையில், மீண்டும் 'பார்ட்டி' பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பரில் பட வெளியீடு இருக்கும் என்று டி.சிவா அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி