தேர்தல் புறக்கணிப்பு அமைச்சரின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

1068பார்த்தது
திற்பரப்பு பேரூராட்சி ஒன்றாம் வார்டுக்கு உட்பட்ட பெருமேலா பகுதியில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பதாக பொதுமக்கள் அமைத்த சாலை  தற்போது சுற்றுலா அணுகு சாலையாக மாற்ற முயற்சிகள் நடைபெறுகிறது.

     ஆனால் இதுவரையிலும் சீரமைப்பு பணிகள் முறையாக நடக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இதையடுத்து இந்த பகுதியை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்து, உடனடி பணி முடிக்க சம்மந்தபட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டடார். ஆனாலும்  பணிகள் நடக்காததால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்தனர்.

     இது குறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று அமைச்சர் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். தேர்தல் முடிந்ததும்  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பொதுமக்களிடம் கூறினர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, பேரூராட்சி பிரதிகளோ  உத்தரவாதம் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
      தொடர்ந்து கவுன்சிலர் கிருஷ்ணவேணி சம்பவ இடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். வரும் நாட்களில் செயல் அலுவலர் நேரில் வந்து பேசி சமூக முடிவு ஏற்படுத்துவதாக கூறிய அமைச்சர் பிரதிநிதிகள்,   மக்கள் வாக்குரிமையை தவறாமல் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி