ரம்ஜான் மாதத்தில் பிரியாணி விற்பனை அமோகம் - ஸ்விக்கி

25344பார்த்தது
ரம்ஜான் மாதத்தில் பிரியாணி விற்பனை அமோகம் - ஸ்விக்கி
ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி, ரமலான் மாதத்தில் ஏறத்தாழ 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது. வழக்கமான மாதங்களை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் அதிகமான பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளது. இந்தப் பட்டியலில் ஹைதராபாத் முன்னிலையில் உள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான பிரியாணிகளும் 5.3 லட்சம் ஹலீம் ஆர்டர்களும் ஹைதராபாத்தில் பெறப்பட்டுள்ளன. இப்தார் விருந்தில் முக்கிய அங்கமாக பாரம்பரிய உணவுகளான ஹலீம், சமோசா ஆகியவற்றுக்கு ஆர்டர்கள் குவிந்ததாகவும் மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை 34 சதவிகிதம் அதிகமான ஆர்டர்கள் வந்ததாகவும் ஸ்விக்கி குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி