டி20 அணிக்கு திரும்பும் பிரபல வேகப்பந்து வீச்சாளர்

65பார்த்தது
டி20 அணிக்கு திரும்பும் பிரபல வேகப்பந்து வீச்சாளர்
காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை (2023) கிரிக்கெட் போட்டி, ஐபிஎல் உள்பட பல போட்டிகளில் இங்கிலாந்தின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை. சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆர்ச்சர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் மே.22இல் பாகிஸ்தானுக்கு எதிராக தொடங்கும் டி20 தொடரில் ஆர்ச்சர் பங்கேற்கவுள்ளார். டி20 உலகக் கோப்பையில் ஜூன் 4இல் இங்கிலாந்து அணிக்கு ஸ்காட்லாந்துடன் முதல் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.